Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ONLINE பத்திரப்பதிவு: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

ONLINE பத்திரப்பதிவு: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

புதிய நடைமுறைப்படி, பத்திரப்பதிவு போது, நேரடி சரிபார்ப்பு மற்றும் விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்படாதது, பத்திரப்பதிவுச் சட்டப்பிரிவுக்கு எதிரானது.

பகிரவும் WhatsApp Facebook

ஆன்லைனில் வருகையில்லா பத்திரப்பதிவு அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், மனை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் முதல் விற்பனை பதிவுக்கு, ஆன்லைனில் வருகையில்லா பத்திரப்பதிவு நடைமுறையை அறிமுகம் செய்வது தொடர்பாக ஜூலை 7-ல் தமிழக அரசாணை பிறப்பித்தது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வந்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த விஜயராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 

வருகையில்லா பத்திரப் பதிவுக்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள மென்பொருளை முறையாக பரிசோதிக்காமல் அவசர, அவசரமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நடைமுறைப்படி, பத்திரப்பதிவு போது, நேரடி சரிபார்ப்பு மற்றும் விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்படாதது, பத்திரப்பதிவுச் சட்டப்பிரிவுக்கு எதிரானது. இந்த புதிய நடைமுறையால், பத்திரப்பதிவின் போது, விருப்பப்பட்டு தான் சொத்துக்களை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை வற்புறுத்தலின்படி விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய முடியாது.

இந்த நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக கொண்டு வரப்பட்ட விதிகளை ரத்து செய்ய வேண்டும்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அக்டோபர் 28-ம் தேதிக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

முந்தைய செய்தி
Onward TECH Q2 22.2% உயர்வு
அடுத்த செய்தி
1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி

தொடர்புடைய செய்திகள்